ADVERTISEMENT

அஜ்மான்: தொழில்துறை பகுதியில் உள்ள கிடங்கில் இன்று தீ விபத்து..

Published: 18 Nov 2026, 8:40 PM |
Updated: 18 Nov 2026, 8:41 PM |
Posted By: Menaka

அஜ்மானின் புதிய தொழில்துறையில் (New Industrial Area) உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்த எமிரேட்டின் குடிமைப் பாதுகாப்பு (Civil Defence) குழுவினர் அவசரகால நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தீ அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் பிற இடங்களுக்குப் பரவாமல் தடுத்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அஜ்மான் ஊடக அலுவலகம் (Ajman Media Office) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்து பெரிய அளவில் இல்லை என்றும், தகவல் கிடைத்தவுடன் விரைந்து செயல்பட்ட குழுவினர் தீயை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

தற்போது, ​​சிறப்புப் பணிக்குழுவினர் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை நிறைவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அஜ்மான்

கடந்த ஆண்டு, அஜ்மான் எமிரேட் முழுவதும் உள்ள கட்டிடங்கள் உயர் சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு உட்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக, ‘கட்டிட இணக்கத் தொகுப்பு’ (building compliance package) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஒரு லட்சம் குடியிருப்பாளர்களுக்கு நிகழும் தீ விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், அஜ்மானில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் ஆகும்.

இந்தத் திட்டமானது, அஜ்மான் நகராட்சி மற்றும் திட்டமிடல் துறையினால் (Ajman Department of Municipality and Planning), அஜ்மான் காவல்துறை மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel