ADVERTISEMENT

முன்பதிவு செய்த விமானக் கட்டணத்தை விட 50 மடங்கு கட்டணம் வெல்லும் அரிய வாய்ப்பு..!! எதிஹாட் ஏர்வேஸின் அதிரடியான ரமலான் விற்பனை..!!

Published: 20 Apr 2021, 10:58 AM |
Updated: 20 Apr 2021, 1:40 PM |
Posted By: admin

அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எட்டிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனமானது ரமலானை முன்னிட்டு, விமானக் கட்டணத்தை விட 50 மடங்கு கட்டணம் அதிகமாக வெல்லும் வாய்ப்பை வழங்கும் அதிரடியான விற்பனையை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஆண்டு முழுவதும் 50,000 பரிசுகளை வழங்குவதற்காக கடந்த வாரம் வெளியிடப்பட்ட  விமான நிறுவனத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ப்ரொமோஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரமலான் விற்பனையி்ன் போது தேர்வு செய்யப்படும் மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு எதிஹாட் கிரெடிட்டில் (Etihad credit)  தாங்கள் செலவு செய்த விமானக் கட்டணத்தை விட 50 மடங்கு விமான கட்டணம் வழங்கப்படும் என்றும், இது இரண்டு ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் விமானங்கள் (flights), மேம்படுத்தல்கள் (upgrades) மற்றும் கூடுதல் கட்டணம் (extras) செலுத்த பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எடுத்துக்காட்டாக, எதிஹாடின் ரமலான் விற்பனையின் போது ஒரு பயணி 1,000 திர்ஹமிற்கு டிக்கெட் வாங்கினால், அவர் எதிர்காலத்தில் 50,000 திர்ஹமிற்கு எதிஹாட் விமானங்களுக்கு செலவழிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ரமலான் விற்பனையில் பங்கேற்க பயணிகள் ஏப்ரல் 20 முதல் மே 12 வரை அபுதாபியிலிருந்து அதன் உலகளாவிய விமான சேவைகளை வழங்கக்கூடிய எந்த இடத்திற்கும் ஒரு விமானத்தை முன்பதிவு செய்து டிசம்பர் 31, 2021 க்கு முன் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எதிஹாட் கெஸ்ட் மைல்ஸ் (etihad guest miles) பயன்படுத்தி முன்பதிவு செய்யும் நபர்களிலும் மூன்று தனித்தனி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

டிராவில் நுழைய, பயணிகள் எதிஹாட் கெஸ்டின் உறுப்பினராக இருக்க வேண்டும். அப்போதுதான் எதிஹாட் கிரெடிட் மற்றும் எட்டிஹாட் கெஸ்ட் மைல்களைப் பெறவும் பயன்படுத்தவும் முடியும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முயற்சியாக, இந்த ரமலான் மாதத்தில் எதிஹாட் விமான நிறுவனம் பரிசு வழங்கும் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. புனித ரமலான் மாதத்தில் அதன் விமான சேவைகளை வழங்கக்கூடிய நாடுகள் முழுவதும் 1,000 பரிசுகளை வழங்கும் என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.