ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 27, 2021) புதிதாக 2,094 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 514,591 ஆக உயர்ந்துள்ளது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,578 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 1,900 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 495,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.