ADVERTISEMENT

UAE: தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறையை அறிவித்த அமீரக அரசு..!!

Published: 4 May 2021, 11:59 AM |
Updated: 5 May 2021, 4:01 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்களை மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் இன்று அறிவித்திருந்த நிலையில் தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களையும் தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

பெடரல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததை போன்றே அரேபிய மாதமான ரமலான் மாதம் 29 முதல் ஷவ்வால் மாதம் 3 வரை தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி ரமலான் நோன்பானது 29 நாட்கள் நீடித்தால், ஊழியர்களுக்கு மே 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மே 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நான்கு நாள் விடுமுறையாக கொண்டாடப்படும்.

ADVERTISEMENT

ஆனால் ரமலான் நோன்பானது 30 நாட்கள் நீடித்தால், விடுமுறையானது மே 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் மே 15 ஆம் தேதி சனிக்கிழமை வரை, அதாவது ஐந்து நாட்களாக கொண்டாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.