ADVERTISEMENT

ஈத் விடுமுறையை முன்னிட்டு வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த RTA..!!

Published: 9 May 2021, 5:03 PM |
Updated: 9 May 2021, 5:28 PM |
Posted By: admin

ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துபாயில் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, அமீரக அரசு அறிவித்திருக்கும் இந்த வருட ஈத் விடுமுறை நாட்களான ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மல்டி லெவல் பார்க்கிங் டெர்மினலில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் RTA அறிவித்துள்ளது.

அதாவது புனித ரமலான் மாதம் 30 நாட்கள் நீடித்தால், மே 11 செவ்வாய்க்கிழமை முதல் மே 15 சனிக்கிழமை வரை பார்க்கிங் இலவசமாக இருக்கும். ரமலான் மாதம் 29 நாட்கள் நீடித்தால், மே 11 செவ்வாய்க்கிழமை முதல் மே 14 வெள்ளிக்கிழமை வரை பொது வாகனங்களுக்கான பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT