ADVERTISEMENT

UAE: ஈத் விடுமுறை நாட்களில் இந்த தடுப்பூசி மையங்கள் செயல்படாது..!! துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு..!!

Published: 11 May 2021, 3:19 AM |
Updated: 11 May 2021, 5:26 AM |
Posted By: admin

துபாயில் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) கோவிட் -19 தடுப்பூசி மையங்கள் மே 12 முதல் 14 வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மையங்களில் ஒன் சென்ட்ரல் (one central), அல் பார்ஷா ஹால் (al barsha hall) மற்றும் அல் துவாரில் (al twar) உள்ள டயாலிசிஸ் மையம் ஆகியவை அடங்கும்.

அதே நேரம் அல் படா, அல் கவானீஜ் மற்றும் துபாய் முனிசிபாலிடியில் உள்ள DHA-வின் கோவிட் -19 மதிப்பீட்டு மையங்கள் (Covid-19 assessment centers) முழு நேரமும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

DHA மருத்துவமனைகள்

ஷிஃப்ட் நேரப்படி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் செயல்படும் என்றும் வழக்கம் போல் வேலை தொடர்கிறது என்பதை மருத்துவ பயிற்சியாளர்கள் தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து DHA மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் முழு நேரமும் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரஷீத், லதிஃபா மற்றும் துபாய் மருத்துவமனை வெளிநோயாளர் சேவைகள் (outpatient services) மே 12 முதல் 14 வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரைமரி ஹெல்த்கேர் சென்டர்ஸ்

நாத் அல் ஹமர், அல் பார்ஷா மற்றும் ஏர்போர்ட் மெடிக்கல் சென்டர்ஸ் ஆகியவை எல்லா நாட்களிலும் முழு நேரமும் இயங்கும் என்றும் மற்ற அனைத்து DHA பிரைமரி ஹெல்த்கேர் சென்டர்களும் ஈத் விடுமுறை நாட்களில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெடிக்கல் ஃபிட்னஸ் சென்டர்

ஈத் விடுமுறை நாட்களில் அனைத்து மருத்துவ உடற்பயிற்சி மையங்களும் (medical fitness centers) மூடப்படும் மற்றும் முஹைஸ்னா மருத்துவ உடற்பயிற்சி மையம் மே 11 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.