அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (SEHA) கொரோனாவிற்கான PCR சோதனைக் கட்டணத்தை ஏற்கெனவே இருந்த விலையை விட 50 சதவீத அளவிற்கும் மேல் குறைத்துள்ளது. அதன்படி, தற்பொழுது அனைத்து SEHA சோதனை மையங்களிலும் ஒரு PCR சோதனைக்கு 65 திர்ஹம்ஸ் கட்டணம் மட்டுமே செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சோதனை மையங்களை இயக்கும் SEHA, சில பிரிவுகளுக்கு இலவசமாக சோதனை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. எனவே, நீங்கள் ஒரு சேஹா ஸ்கிரீனிங் மையத்திலிருந்து PCR பரிசோதனையை எடுக்க விரும்பினால், முன்பதிவு செய்வது மற்றும் எங்கு செல்வது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
யார் இலவசமாக PCR சோதனை மேற்கொள்ள முடியும்?
பின்வரும் பிரிவினர் இலவச கொரோனா பரிசோதனைக்கு தகுதியுடையவர்கள்.
- ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள்
- 50 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் (Residents above 50 years old)
- நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
மேற்கூறிய பிரிவில் உள்ளவர்கள், 8001717 என்ற ஹாட்லைனை அழைப்பதன் மூலம் இலவச COVID-19 சோதனையை பதிவு செய்யலாம்.
இல்லையெனில் பின்வரும் பிரிவினர் SEHA App மூலம் முன்பதிவு செய்வதன் மூலம் இலவச சோதனை பெறலாம்.
- ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள்
- எமிராட்டி பெண்களின் குழந்தைகள்
- எமிராட்டி வீடுகளில் பணிபுரியும் வீட்டுத் தொழிலாளர்கள்
- நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
- 50 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் (Residents above 50 years old)
- மாற்றுத்திறனாளிகள்
- கர்ப்பிணி பெண்கள்
குறிப்பு: நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே இவர்கள் இலவச கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
மேற்கூறிய பிரிவினை தவிர மற்றவர்கள் அனைவரும் SEHA மையங்களில் 65 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்தி கொரோனாவிற்கான PCR சோதனைகளை மேற்கொள்ளலாம்.
அமீரகத்தில் உள்ள SEHA சோதனை மையங்கள்:
துபாய்
• சிட்டி வாக்
நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
• மினா ரஷீத்
நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
• அல் கவானீஜ்
நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
அபுதாபி
• சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை
• அல் வத்பா ஸ்கிரீனிங் மையம்
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; வெள்ளிக்கிழமை இயங்காது.
- அல் பஹியா ஸ்கிரீனிங் மையம்
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; வெள்ளிக்கிழமை இயங்காது
• அல் ஷம்கா ஸ்கிரீனிங் மையம்
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; வெள்ளிக்கிழமை இயங்காது
• அபுதாபி கார்னிச்
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; வெள்ளிக்கிழமை இயங்காது
• அல் அய்ன் – அல் ஹிலி ஸ்கிரீனிங் மையம்
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; வெள்ளிக்கிழமை இயங்காது
- அல் அய்ன் – ஆஷரேஜ் ஸ்கிரீனிங் மையம்
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை
• அல் தஃப்ரா – மதினத் சையத்
நேரம்: சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை; வெள்ளிக்கிழமை இயங்காது
- அல் தஃப்ரா – கயாத்தி
நேரம்: ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை; வெள்ளி மற்றும் சனிக்கிழமை இயங்காது
• அல் தஃப்ரா – அல் மிர்ஃபா
நேரம்: ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை; வெள்ளி மற்றும் சனிக்கிழமை இயங்காது
- அல் தஃப்ரா – அல் சில்லா
- அல் தஃப்ரா – லிவா
- அல் தஃப்ரா – டெல்மா
ஷார்ஜா
• கோல்ஃப் மற்றும் ஷூட்டிங் கிளப்
நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
அஜ்மான்
• அல் ஜெர்ஃப் 2
நேரம்: ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை; வெள்ளி மற்றும் சனிக்கிழமை இயங்காது
ராஸ் அல் கைமா
• தஃபான் அல் கோர் மையம், கார்னிச் அருகில்
நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
உம் அல் குவைன்
• பாதுகாப்பு முகாம் (Defence Camp), ஷேக் கலீஃபா ஹால்
நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
ஃபுஜைரா
• தேசிய சோதனை மையம் ( National testing centre), ஃபுஜைரா மருத்துவமனைக்கு அருகில்
நேரம்: தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்