ADVERTISEMENT

சவூதியில் 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட இருக்கும் மதிய ஓய்வு இடைவேளை..!!

Published: 14 Jun 2021, 11:04 AM |
Updated: 14 Jun 2021, 11:45 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) கோடைகாலத்தை முன்னிட்டு மதிய நேரங்களில் நேரடியாக சூரியனின் கீழ் மற்றும் திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை தடை செய்வதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை  மூன்று மாதங்களுக்கு நேரடியாக சூரியனின் கீழ் அல்லது திறந்த வெளிகளில் தொழிலாளர்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜூன் 15 (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்து செப்டம்பர் 15, 2021 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்கும், எந்தவொரு ஆபத்துகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் அவர்களை காப்பாற்றுவதற்கும் அதன் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொழில்சார் காயங்கள் மற்றும் நோய்களைக் குறைப்பதற்கும், தொழிலாளர்களை விபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கும், செயல்திறன் மற்றும் தடுப்பு வழிமுறைகளை உயர்த்துவதையும் அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உற்பத்தி அளவை மேம்படுத்துவதிலும் அதிகரிப்பதிலும் பிரதிபலிக்கும்.

வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண் (19911) மூலமாகவோ அல்லது “Together for Monitoring” போர்ட்டல் https://rasd.ma3an.gov.sa மூலமாகவோ இந்த விதியினை மீறுவது குறித்து புகார் அளிக்க முடியும் என்றும் அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

ADVERTISEMENT