ADVERTISEMENT

UAE: பொது இடங்களில் தூசியுடன் வாகனங்களை விட்டுச் சென்றால் 3,000 திர்ஹம் அபராதம்..!! எச்சரிக்கை விடுக்கும் அபுதாபி முனிசிபாலிட்டி..!!

Published: 15 Jun 2021, 7:37 AM |
Updated: 15 Jun 2021, 7:43 AM |
Posted By: admin

அமீரகத்தில் பல வாரங்களாக தெருக்களிலும் பொது இடங்களிலும் தூசியடைந்த நிலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி முனிசிபாலிட்டி நகரை சுத்தமாக வைத்திருப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அழுக்கான, கைவிடப்பட்ட வாகனங்களுக்கான ஒரு புதிய பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் மேற்கூறிய நிலையில் வாகனங்களை விட்டுச் சென்றால் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் சிறையில் அடைக்கப்படும்.

ADVERTISEMENT

அபுதாபியில் உள்ள முசாஃபா தொழில்துறை பகுதி, மஃப்ரக், பனியாஸ், அல் வாத்பா மற்றும் பல பகுதிகளில் காணப்படும் நூற்றுக்கணக்கான அழுக்கு மற்றும் கைவிடப்பட்ட கார்களை சிறையில் அடைத்துள்ளதாக குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

அழுக்கான, தூசியடைந்த வாகனங்கள் நகராட்சி கூறும் சமூக உரிமைகளை பொறுப்பற்ற முறையில் மீறுவது என்ற குற்றத்திற்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் வீதிகள் மற்றும் கார் பார்க்கிங் பகுதிகளில் தினசரி ஆய்வுகள் நகராட்சி ஆய்வாளர்களால் நடத்தப்படுகின்றன. விதிமீறல் புரிந்த வாகனம் இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படுகிறது. 14 நாள் காலத்தின் முடிவில், வாகனத்தில் ஒரு அறிவிப்பு (notice) வைக்கப்பட்டு, அந்த வாகனத்தை விரைவில் அகற்றுமாறு உரிமையாளருக்குக் கோரிக்கை விடுக்கப்படும். 24 மணி நேரத்திற்குப் பிறகும்  வாகனம் அதே நிலையில் இருந்தால், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.