ADVERTISEMENT

அமீரகத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!! சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அறிவிப்பு..!!

Published: 12 Mar 2020, 12:41 PM |
Updated: 12 Mar 2020, 12:44 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (The Ministry Of Health And Prevention-MoHAP) இன்று மேலும் 11 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை மொத்தம் 85 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்ற நபர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 11 நபர்களில் இரண்டு இத்தாலியர்கள், இரண்டு பிலிப்பைன்ஸ், மாண்டிநீக்ரோ (Montenegro) நாட்டை சேர்ந்த ஒருவர், கனடா நாட்டை சேர்ந்த ஒருவர், ஒரு ஜெர்மன், ஒரு பாகிஸ்தானி, ஒரு எமிராட்டி, ஒரு ரஷ்ய மற்றும் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் ஆகியோர் உள்ளனர்.

ADVERTISEMENT

நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நிலைமையைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவதாக MoHAP குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரங்களைப் பின்பற்றி, வெப்ப ஸ்கேனர்கள் மற்றும் தனிமைப்படுத்தும் அறைகள் உட்பட, கொரோனா வைரஸைக் கையாள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களுடன் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று MoHAP உறுதியளித்தது.

ADVERTISEMENT

MoHAP தனது அறிக்கையில் பொது மக்களுக்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான தனிப்பட்ட சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரசிற்கான விழிப்புணர்வு வழிமுறைகளை MoHAP-ன் இணையதளத்திலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் தெரிந்துகொள்ளுமாறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.