ADVERTISEMENT

UAE: பொது இடங்களுக்குள் நுழைய விதிக்கப்பட்ட கிரீன் பாஸ் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!!

Published: 18 Jun 2021, 10:18 AM |
Updated: 18 Jun 2021, 10:36 AM |
Posted By: admin

அபுதாபியில் பொது இடங்களில் நுழைவதற்கு அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இந்த நடைமுறையானது ஜூன் 15 முதல் அமலுக்கு வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த நடைமுறையானது தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு சில அல்ஹோஸ்ன் அப்ளிகேஷன் பயனர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப சிக்கல்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை மறுஆய்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் அனைவருக்கும் சேவையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நுழைய அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனின் கிரீன் பாஸ் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக குழு அறிவித்திருக்கின்றது.

அப்ளிகேஷன் முழுவதுமாக அப்டேட் செய்யயப்பட்டு அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்ளிகேஷனை இடையூறு இல்லாமல் தொடர்சசியான சேவை பெறுவதை உறுதிசெய்த பிறகு கிரீன் பாஸ் முறை மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுவரையிலும் அபுதாபியில் நுழைய அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டவர்கள் தற்போதைய நடைமுறைகளுக்கு கொரோனா சோதனை முடிவுகளைக் காண்பிக்க SMS-களைப் பயன்படுத்த குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது இன்று, ஜூன் 18 முதல் நடைமுறைக்கு வந்து, அப்ளிகேஷன் அப்டேட் செய்யும் வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு இந்தக் குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த ஜூன் 15 முதல் மால்கள், உணவகங்கள், ஜிம், பார்க் என பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைய அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.