ADVERTISEMENT

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் அமீரகம் வர அனுமதி உண்டா..?? துபாய் சுகாதார ஆணையம் விளக்கம்..!!

Published: 21 Jun 2021, 1:59 AM |
Updated: 21 Jun 2021, 2:04 AM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்க அமீரக அரசு அங்கீகரித்த தடுப்பூசி பெற்ற குடியிருப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் இந்தியாவில் இருப்பவர்களிடம் தற்போது நிலவி வருகிறது.

ADVERTISEMENT

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகாவின் தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு எனும் பெயரில் போடப்பட்டு வருகிறது. இது அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிதான் என துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

அமீரக அரசு தற்போது வரை நான்கு தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அவை ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா, ஃபைசர்-பயோஎன்என்டெக், சினோபார்ம் மற்றும் ஸ்பூட்னிக் V.

ADVERTISEMENT

இந்தியாவில் நிர்வகிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பயணிகள் புதிய பயண நெறிமுறைகளின்படி அமீரகம் திரும்ப அனுமதி வழங்கப்படுமா என்று சமூக ஊடகங்களில் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களின் கேள்விகளுக்கு சுகாதார ஆணையம் பதிலளித்தது.

அதில், “ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மற்றும் கோவிஷீல்ட் இரண்டும் ஒரே தடுப்பூசிகள் தான்” என்று DHA கூறியுள்ளது.

ADVERTISEMENT