ADVERTISEMENT

கொளுத்தும் வெயில்… உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலையை பதிவு செய்த வளைகுடா நாடு..!!

Published: 28 Jun 2021, 8:18 AM |
Updated: 28 Jun 2021, 8:23 AM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் கோடை காலம் என்றாலே வெப்பநிலை உச்சத்திற்கு செல்லும் என்பது நாம் அறிந்ததே. இதில் இந்த வருடத்திற்கான உலகின் மிக உயர்ந்த வெப்பநிலை 53.2 ° C ஐ வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் பதிவுசெய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகெங்கிலும் வெப்பநிலையை கண்காணிக்கும் ஒரு சர்வதேச வலைத்தளமான Eldoradoweather, 13 அரபு நகரங்களை உலகின் வெப்பமான இடங்களில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளது.

அதில் குவைத்தில் இருக்கக்கூடிய நவாஸிப் நகரத்தில் வெப்பநிலை 53.2 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது என வலைத்தளம் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள ஜஹ்ராவில் 50.2° C பதிவாகியதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் பொதுவாகவே கோடைகாலங்களில் அதிக வெப்பநிலை நிலவும். இதன் காரணமாக மதிய நேரங்களில் நேரடியாக சூரியனுக்குக் கீழ் அல்லது திறந்த வெளியில் தொழிலாளர்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டு தற்பொழுது வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.