ADVERTISEMENT

புதிய வகை கொரோனா பரவல்: அமீரகத்திற்கு பயணத் தடையை விதித்தது சவூதி அரேபியா..!!

Published: 3 Jul 2021, 5:37 AM |
Updated: 3 Jul 2021, 5:50 AM |
Posted By: admin

கொரோனா வைரஸில் மாறுபட்ட புதிய வகைகளின் பரவலானது அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு முன் அனுமதியுமின்றி செல்லவும், அங்கிருந்து சவூதி வருவதற்கும் உண்டான பயணத்தை தடை செய்வதாக சவூதி உள்துறை அமைச்சகம் தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த மூன்று நாடுகளுக்கான விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) இரவு 11 மணிக்கு நிறுத்தப்படும். இந்த தேதிக்குப் பிறகு சவுதி குடிமக்கள் உட்பட அனைத்து பயணிகளும் சவூதிக்குள் வரும் போது கட்டாய நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அரபு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சவூதிக்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர், மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்று வெளியேறிய பயணிகளுக்கு அல்லது சவூதி அரேபியா பயணத் தடையை விதித்த வேறு எந்த நாட்டிற்கும் பயணித்து வெளியேறிய பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT