ADVERTISEMENT

UAE: புகழ்பெற்ற குளோபல் வில்லேஜின் 26 வது சீசன் துவங்கப்படும் தேதி வெளியீடு..!!

Published: 7 Jul 2021, 8:09 AM |
Updated: 11 Jul 2021, 2:22 PM |
Posted By: admin

துபாயின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ் (Global Village) வரும் அக்டோபர் மாதம் முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் திறக்கப்படும் குளோபல் வில்லேஜின் 26 வது சீசன் அடுத்த வருடம் (2022) ஏப்ரல் வரை மொத்தம் 167 நாட்கள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட குளோபல் வில்லேஜ் தனது 25 ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டத்தை மிக சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

துபாயில் இருக்கும் குளோபல் வில்லேஜ் உலகெங்கிலும் உள்ள ஷாப்பிங், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களுக்கான தனித்துவமான மற்றும் ஒருங்கிணைந்த திறந்தவெளி இடமாகும். 1997 ஆம் ஆண்டில் முதன் முதலில் தொடங்கப்பட்ட குளோபல் வில்லேஜ் துபாயில் இருக்கும் க்ரீக் பகுதியில் நடைபெற்றது. பின்னர் ஓட் மேத்தா (Oud Metha), துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, என இடங்கள் மாறி 2005 ம் ஆண்டு முதல் நிரந்தரமாக ஒவ்வொரு ஆண்டும் ஷேக் முகமது பின் சையத் சாலையில் (Sheikh Mohammad Bin Zayed Road Exit 37) நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

 

குளோபல் வில்லேஜ், பார்வையாளர்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை வழங்கும் வகையிலும், அனைத்து பார்வையாளர்களையும் ஒரு உற்சாகமான பன்முக கலாச்சார சாகசத்திற்கு அழைத்துச் செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குளோபல் வில்லேஜ் – 2021

நடைபெறும் இடம் : ஷேக் முகமது பின் சயீத் சாலை Exit 37.

திறக்கப்படும் நாள்: அக்டோபர் 26, 2021, செவ்வாய்க்கிழமை

சீசன் முடிவடையும் நாள்: ஏப்ரல் 10, 2022, ஞாயிற்றுக்கிழமை