துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் புதன்கிழமை இரவு ஒரு மாபெரும் வெடி சப்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்த ஒரு கொள்கலனில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், கப்பல் துறைமுகத்தின் பிரதான கப்பல் பாதையிலிருந்து நள்ளிரவில் வெளியேறத் தயாரான போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
துபாய் சிவில் பாதுகாப்புக் குழுவின் கூற்றுப் படி, எதிர்பாராவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த கப்பலில் 14 மாலுமிகள் இருந்தனர் என்றும் அவர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.
الحريق تحت السيطرة ولا توجد أي وفيات أو إصابات جراء الحادث في ميناء جبل علي pic.twitter.com/cQAVRDSa5c
— Dubai Media Office (@DXBMediaOffice) July 7, 2021
துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி தீயணைப்பு இடத்திற்குச் சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து, கப்பல்துறை 14 (dockside 14) இல் உள்ள ஒரு சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறினார்
A fire caused by an explosion within a container on board a ship at Jebel Ali Port has been brought under control; no casualities have been reported. pic.twitter.com/oMTaJhgEYd
— Dubai Media Office (@DXBMediaOffice) July 7, 2021
“கப்பல் 130 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டிருந்தது. அதில் மூன்று கொள்கலன்களில் எரியக்கூடிய பொருட்கள் இருந்தன. அதற்குள் வெடிபொருட்கள் அல்லது கதிரியக்க பொருட்கள் எதுவும் இல்லை ”என்று லெப்டினென்ட் ஜெனரல் அல் மர்ரி கூறினார்.
துபாய் சிவில் பாதுகாப்பு இயக்குனர் மேஜர் ஜெனரல் ரஷீத் அல் மெட்ரூஷி, தீ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்தினார். மேலும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினருக்கு 40 நிமிடங்கள் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
துபாய் அரசு ஊடக அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் மோனா அல் மர்ரி கூறுகையில், அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
40 دقيقة في إطفاء حريق سفينة الحاويات في ميناء جبل علي .. بلا إصابات. pic.twitter.com/80kToKAM4B
— Dubai Media Office (@DXBMediaOffice) July 7, 2021
துபாயின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் துறைமுகத்திலிருந்து பெரும் வெடி சப்தத்தைக் கேட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து துறைமுகத்தில் கப்பல்களின் இயல்பான இயக்கத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஜெபல் அலி துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.