ADVERTISEMENT

அமீரகத்தில் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கொரோனா விதிமுறை..!!

Published: 9 Jul 2021, 2:00 AM |
Updated: 9 Jul 2021, 7:09 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் தற்பொழுது மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களைப் பார்வையிட வரும் தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்களுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, தடுப்பூசி போடாத அனைத்து நபர்களும் மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு வரும் போது எதிர்மறையான PCR சோதனை முடிவை வழங்க வேண்டும் என்றும் அரசுத்துறைகளுக்கு வருவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் இந்த சோதனை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று அரசாங்க மனித வளங்களுக்கான மத்திய ஆணையம் (FAHR) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆணையம் இது குறித்து வெளியிட்ட செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு வருகை தரும் நபர்களுக்கு ஆணையம் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள், அவுட்சோர்சிங் அல்லது சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் அல்லது அரசுத்துறை ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து நபர்களுக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் கீழே குறிப்பிட்டுள்ள நபர்களுக்கே அரசுத்துறை மற்றும் அமைச்சகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ADVERTISEMENT
  • கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸினையும் பெற்றவர்கள்.
  • தடுப்பூசி போடாதவர்கள், வருகைக்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட  எதிர்மறையான PCR சோதனை முடிவைக் கொண்டிருப்பவர்கள்.
  • தடுப்பூசி பெற தகுதியற்றவர்கள் விலக்கு சான்றிதழை வைத்திருந்து 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான PCR சோதனை முடிவைக் கொண்டிருப்பவர்கள்.
  • 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.