ADVERTISEMENT

எனது அணியை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என பதிவிட்ட துபாய் இளவரசர்..!! ஜெபெல் அலி போர்ட் தீ விபத்தில் விரைந்து செயலாற்றிய பாதுகாப்புக் குழுவினருக்குப் பாராட்டு..!!

Published: 9 Jul 2021, 3:27 AM |
Updated: 9 Jul 2021, 3:36 AM |
Posted By: admin

துபாயின் மகுட இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஜெபல் அலி துறைமுகத்தில் ஒரு கப்பலில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்தை விரைவாகக் கட்டுப்படுத்தியதற்காக பாதுகாப்புப் படையினரைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

துபாயின் எக்ஸிகியூட்டிவ் கவுன்சிலின் தலைவரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் அவர்கள், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீயணைப்பு தளத்தில் பல்வேறு அணிகள் தீவிபத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை புகைப்படமாக வெளியிட்டு அதற்கு எனது அணியைப் பார்தது பெருமை கொளகிறேன் என தலைப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

துபாயின் துணை ஆட்சியாளரான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் அவசரகால சேவை புரிந்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கப்பல் இயக்கத்தை விரைவாக மீண்டும் தொடங்குவதற்காக துறைமுக அதிகாரிகளையும் அவர் பாராட்டினார்.

இவர்கள் மட்டுமல்லாது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் பாதுகாப்புப்படையினரின் விரைவான மற்றும் விவேகமான செயலுக்கு சமூக ஊடகங்களில் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

புதன்கிழமை பிற்பகுதியில் ஜெபல் அலி துறைமுகத்தில் ஒரு கப்பலில் ஒரு கொள்கலனுக்குள் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்பட்ட தீ 40 நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.