ADVERTISEMENT

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அமீரகத்தில் கடும் தண்டனை..!! எச்சரிக்கும் பொதுவழக்குத் துறை..!!

Published: 11 Jul 2021, 12:56 AM |
Updated: 11 Jul 2021, 3:39 AM |
Posted By: admin

அமீரகத்தில் டிரைவிங் லைசென்ஸ் இல்லாத எந்தவொரு நபரும் எந்தவொரு வாகனத்தையும் சாலையில் ஓட்ட முடியாது என்று அமீரகத்தின் பொதுவழக்கு துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்து மற்றும் அதன் திருத்தங்கள் தொடர்பாக 1995 ஆம் ஆண்டின் மத்திய சட்டம் எண் 21 இன் 51 வது பிரிவின்படி, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், குறிப்பிட்ட வகையான வாகனத்திற்கு உரிமம் பெற்று வேறு வகை வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமூகத்திற்கு அமீரகத்தின் சட்ட நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பொது வழக்கு துறை மேற்கொண்டு வரும் விழிப்பணர்வின் கீழ் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அமீரகவாசிகள் இதனைக் கருத்தில் கொண்டு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களை ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.