ADVERTISEMENT

UAE: ட்ரக் செல்வதற்கு தடை விதித்துள்ள ஷார்ஜா காவல்துறை..!! ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு அறிவிப்பு வெளியீடு..!!

Published: 18 Jul 2021, 12:39 AM |
Updated: 18 Jul 2021, 5:57 AM |
Posted By: admin

ஈத் அல் அத்ஹா கொண்டாட்டங்களின் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஜூலை 19 திங்கள் முதல் ஜூலை 23 வெள்ளி வரை கொர்ஃபக்கான் சிட்டி வழியாக செல்லும் ட்ரக்குகளுக்கு ஷார்ஜா காவல்துறை தடை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா காவல்துறையின் பொது கட்டளைத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டு, மூன்று நாட்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.

உள் மற்றும் வெளி சாலைகளில் போக்குவரத்து ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்டி, குறிப்பாக தடைசெய்யப்பட்ட காலங்களில், போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறு ட்ரக் ஓட்டுநர்களுக்கு ஷார்ஜா காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ADVERTISEMENT