ADVERTISEMENT

UAE: ஆரம்பிக்க இருக்கும் சுத்திகரிப்பு திட்டம்..!! பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தும் காவல்துறை..!!

Published: 18 Jul 2021, 2:42 AM |
Updated: 18 Jul 2021, 2:42 AM |
Posted By: admin

அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் மற்றும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜூலை 19 திங்கள் முதல் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சுத்திகரிப்பு திட்டமானது தினமும் நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் தடைசெய்யப்படும் மற்றும் போக்குவரத்து சேவைகள் இருக்காது.

ADVERTISEMENT

எனவே சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் சமயங்களில் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தவிர்த்து அவசியமில்லாமல் குடியிருப்பாளர்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டிலேயே இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இயக்க அனுமதி பெற வேண்டி www.adpolice.gov.ae என்ற லிங்கில் சென்று விண்ணப்பிகலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கான விதிமுறைகளையும் அபுதாபி அரசு தற்பொழுது புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.