ADVERTISEMENT

Covid19: மறு அறிவிப்பு வரும் வரை லாக்டவுன் அமலில் இருக்கும்..!! ஓமான் அரசு அறிவிப்பு..!!

Published: 29 Jul 2021, 10:23 AM |
Updated: 29 Jul 2021, 10:26 AM |
Posted By: admin

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஓமான் அரசானது இரவு நேர இயக்கத்தடையை நீட்டித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ள இந்த இயக்கத் தடையானது வியாழக்கிழமை (இன்று) தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லாக்டவுன் நேரமானது குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனி நபர் இயக்கம் மற்றும் வணிக நடவடிக்கைகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை செய்யப்படுவதாக ஓமான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஜூன் மாத நடுப்பகுதியில் இருந்து நாட்டில் தொற்றுநோய் பாதிப்பானது நிலையான வீழ்ச்சியைக் கண்ட பின்னர் தற்பொழுது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.