ADVERTISEMENT

UAE: வெளிநாடு சென்று 72 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணிகள் PCR டெஸ்ட் எடுக்க தேவையில்லை..!! அறிவிப்பை வெளியிட்ட எதிஹாட் ஏர்வேஸ்..!!

Published: 30 Jul 2021, 4:08 PM |
Updated: 30 Jul 2021, 4:11 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை விட்டு வேறு ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு குறுகிய கால பயணமாக சென்று அடுத்த 72 மணி நேரத்திற்குள்ளேயே அபுதாபிக்கு திரும்பிவரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான நெகடிவ் PCR கோவிட் -19 சோதனை அறிக்கை தேவையில்லை என்று அபுதாபியை சேர்ந்த பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தங்களின் சொந்த தேவைகளுக்காக ஓரிரு நாட்களில் வெளிநாட்டிற்கு சென்று திரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகம் அல்லது தொழில் சார்ந்த தேவைகளுக்காக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அவர்களின் பயணத்தை எளிமையாகவும், எளிதாகவும் மாற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான நெகட்டிவ் PCR சோதனை அறிக்கையை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என்றும் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து எதிஹாட் விமான நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “72 மணி நேரத்திற்கும் குறைவான குறுகிய கால பயணத்தில் பயணிக்கும் பயணிகளை,அவர்களின் பயணத்திற்கு முன் எடுத்த PCR சோதனை முடிவைப் பயன்படுத்தியே அபுதாபியிலிருந்து செல்லவும், மீண்டும் திரும்பவும் அனுமதிக்க அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவின் ஒப்புதலை எதிஹாட் பெற்றுள்ளது. தற்போது பயணிகள் எந்த இடத்திற்கும் பயணிக்க முடியும் ஆனால் அவர்கள் பெற்ற சோதனை அறிக்கை முடிவின் நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் கட்டாயம் அபுதாபிக்கு திரும்ப வேண்டும். அந்த PCR சோதனை ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்ததும் தங்களின் விமான பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதத்தை அடைந்த உலகின் முதல் விமான நிறுவனம் எதிஹாட் ஏர்வேஸ் ஆகும்.

ADVERTISEMENT

மேலும், விமான நிலையத்திலிருந்து பயணிகள் புறப்படுவதற்கு முன்னர் எதிர்மறையான PCR சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்திய முதல் விமான நிறுவனமும் எதிஹாட் ஏர்வேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.