ADVERTISEMENT

UAE: 3 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களும் சினோஃபார்ம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..!! சுகாதார அமைச்சகம் ஒப்புதல்..!!

Published: 2 Aug 2021, 12:36 PM |
Updated: 2 Aug 2021, 1:13 PM |
Posted By: admin

கொரோனாவிற்கு எதிராக போடப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியை 3 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இப்போது வழங்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்களன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

விரிவான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை நடத்தியதற்குப் பின்னரே குழந்தைகளுக்கான சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசர பதிவுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின் நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க அவசர பயன்பாட்டிற்கான அங்கீகாரம் மற்றும் உள்ளூர் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு ஜூன் மாதம் அபுதாபியில் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கான சினோபார்ம் தடுப்பூசியின் நோயெதிர்ப்புத் திறனுக்கான ஆய்வை 900 குழந்தைகளுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஆய்வு, பெற்றோரின் முழு ஒப்புதலுடன் நடத்தப்பட்டது என்றும், அனைத்து இளம் தன்னார்வலர்களும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு செயல்பாட்டின் ஒவ்வொரு படியிலும் சிறப்பு கவனிப்பு பெற்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வயதினருக்கான தடுப்பூசியின் செயல்திறனை ஆய்வு செய்த மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் முதல் நாடு அமீரகம் ஆகும்.

சீனா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் இந்தியா போன்ற தடுப்பூசியினை உற்பத்தி செய்யும் பிற நாடுகளும் கடந்த சில மாதங்களாக இதே போன்ற மருத்துவ பரிசோதனைகளை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.