ADVERTISEMENT

அமீரக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்..!! குடியிருப்பாளர்களை பயணிக்க அனுமதித்த அரசுக்கு இந்திய தூதரகத்தின் ட்வீட்

Published: 4 Aug 2021, 5:38 AM |
Updated: 4 Aug 2021, 5:40 AM |
Posted By: admin

தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் அமீரகம் திரும்புவதற்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்ட அமீரக அரசின் நடவடிக்கையை இந்திய தூதரகம் வரவேற்பதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 24 முதல் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த பயணத்தடையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக, அமீரக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

ADVERTISEMENT

இதனை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) “வரவேற்கக் கூடிய செய்தி” என்று குறிப்பிட்டுள்ளது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், “ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு நல்ல செய்தி” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், “பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்றும் துணைத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது.