ADVERTISEMENT

இந்தியா, இலங்கையிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் ICA ஒப்புதல் பெற விண்ணப்பிப்பது எப்படி..?? தெளிவான விளக்கம் உள்ளே..!!

Published: 4 Aug 2021, 1:27 AM |
Updated: 4 Aug 2021, 3:05 AM |
Posted By: admin

கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தால் பயண தடை விதிக்கப்பட்டிருந்த இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளில் சிக்கி தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்கள் தங்களின் பயணத்திற்கு முன்பாக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்திடம் (ICA) இருந்து அவர்கள் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகம் திரும்புவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள பயணத்திற்கு முந்தைய இந்த ஒப்புதலை ICA வின் இணையதளத்தில், பயணிகளின் தகவல்களை நிரப்புவதன் மூலம் பெறலாம் என்றும் அமீரக அரசால் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த அனுமதி தொடர்பான பட்டியலிலிருந்து முழுவதும் மாறுபட்ட புதிய ஒப்புதல் முறையை கடுமையான சோதனை செயல்முறைகளுடன் ICA மேம்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய புதுப்பிக்கப்பட்ட ICA வின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, அமீரகம் திரும்பும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பு தங்களின் பாஸ்போர்ட் விவரங்கள், தடுப்பூசி செலுத்தப்பட்ட தகவல்கள், கொரோனாவிற்கான PCR சோதனை முடிவு மற்றும் சான்றிதழின் நகல்கள் போன்றவற்றை அதில் பதிவேற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுளளது.

ADVERTISEMENT
பயணத்திற்கு முந்தைய ICA ஒப்புதலை பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து ஒவ்வொன்றாக கீழே காணலாம்…
படி 1: பயணம் செய்ய விண்ணப்பிப்பவரின் தகவலை நிரப்பவும்

  அமீரகத்திற்கு பயணிக்க விண்ணப்பிக்கும் குடியிருப்பாளர் குறித்த தகவலில் பயணியின் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், அமீரகம் வந்திறங்கும் தேதி, வருகை தரும் விமான நிலையம், புறப்படும் நாடு மற்றும் விண்ணப்பிக்கும் பயணியின் மின்னஞ்சல் போன்ற விபரங்களை நிரப்ப வேண்டும்.

பயணிகளின் தகவல்கள் நிரப்பப்பட்டவுடன் அதில் குறிப்பிடப்பட்ட மின்னஞ்சலுக்கு ஒரு QR குறியீடு அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் பயணியால் உள்ளிடப்பட்ட தகவல்கள் சரியானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
படி 2: பாஸ்போர்ட் தகவலை நிரப்பவும்

பயணிகள் தங்களின் பாஸ்போர்ட் வகை, பாஸ்போர்ட் காலாவதி தேதி, பாஸ்போர்ட் வழங்கப்பட்ட தேதி, பாஸ்போர்ட் எண் மற்றும் பாஸ்ப்போர்ட்டை வழங்கிய நாடு ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

படி 3: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முகவரியை நிரப்பவும்

அமீரகம் திரும்பும் குடியிருப்பாளர்கள் அமீரகத்தில் வசியக்கூடிய உள்ளூர் முகவரி மற்றும் அமீரக மொபைல் நம்பரை நிரப்ப வேண்டும்.

படி 4: தடுப்பூசி மற்றும் PCR சோதனை தேதிகளை நிரப்பவும்

இந்த படிவத்தில் குடியிருப்பாளர்கள் தாங்கள் செலுத்திக்கொண்டு தடுப்பூசியை தேர்வு செய்து கொள்ளும் விதமாக எட்டு தடுப்பூசிகளின் பட்டியலை ICA வழங்கியுள்ளது. (அவை:- ஸ்புட்னிக் V (Sputnik V), ஜான்சன் (ஜான்சன்   அண்ட் ஜான்சன்) Janssen (Johnson and Johnson), மாடர்னா (Moderna), நோவாவாக்ஸ் (Novavax), ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா (OxfordUni AstraZeneca), ஃபைசர் பயோஎன்டெக் (PfizerBioNTech), சினோஃபார்ம் (Sinopharm) மற்றும் சினோவாக் (கொரோனாவாக்) Sinovac (CoronaVac) ஆகியவை ஆகும்). இதில் ஆக்ஸ்போர்டுனி அஸ்ட்ராஜெனேகா இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.

தடுப்பூசியை தேர்வு செய்தவுடன் பயணிகள் தங்களின் முதல் மற்றும் இரண்டாவது டோஸை பெற்ற தேதிகளை நிரப்ப வேண்டும். (மூன்றாவது டோஸை பெற்றிருந்தால் அவர்கள் அதனையும் குறிப்பிடலாம்).

அதற்கு பின்னர், பயணத்திற்கு முன்பு பெறப்பட்ட PCR சோதனை மேற்கொள்ளப்பட்ட தேதி மற்றும் சோதனை முடிவு வெளியாகிய தேதி ஆகிய தகவல்களை குறிப்பிட வேண்டும்.

படி 5: பயணத்திற்கான ஆவணங்களைப் பதிவேற்றவும்

விண்ணப்பிக்கும் பயணியின் அனைத்து தகவல்களும் நிரப்பப்பட்டவுடன் அப்பயணியின் பாஸ்போர்ட் நகல், பயணியின் போட்டோ மற்றும் பிசிஆர் சோதனை முடிவுகளின் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். இதில் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழையும் பதிவேற்றிக்கொள்ளலாம்.

படி 6: நிரப்பப்பட்ட தகவல்கள் சரியானவையா என்பதை பிரகடனம் செய்யவும்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் வெளியிட்டிருந்த சட்டங்களை முழுமையாக கடைபிடிப்பது மற்றும் பயண அனுமதிக்கு இணைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரியானவை என்பதை உறுதிப்படுத்த இதில் கிளிக் செய்யவும். பின்னர் இறுதியாக Send எனும் பட்டனை அழுத்தவும்.

இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பயணிக்கவிருக்கும் அனுமதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் https://smartservices.ica.gov.ae/ எனும் இந்த லிங்கில் சென்று மேற்கூறியவாறு தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் தகவல்களை குறிப்பிடுவதன் மூலம் அமீரகம் திரும்புவதற்கான ICA வின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ளலாம்.