ADVERTISEMENT

கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளில் தளர்வை அறிவித்த அமீரக அரசு..!! என்னென்ன தளர்வுகள்..??

Published: 9 Aug 2021, 3:58 AM |
Updated: 9 Aug 2021, 4:02 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளானது தற்பொழுது சற்று தளர்த்தப்படுவதாக அமீரக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதில் ஒரு பகுதியாக அமீரகத்தில் உள்ள ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் உணவகங்களில் உள்ள மக்கள் திறனானது 80 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளது.

அமீரகத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய விதிகளின்படி உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் ஒரு மேஜையில் 10 பேர் வரை அமரலாம். அவர்கள் மேசைகளில் இருந்து விலகி இருக்கும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.

பங்கேற்பாளர்கள் போதுமான சமூக இடைவெளியை பராமரித்து முக கவசங்களை அணிந்தால், 60 சதவிகிதத் திறன் அடிப்படையில் நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

ADVERTISEMENT

பொதுப் போக்குவரத்தின் திறன் 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்கள் 60 சதவிகித திறனில் இருக்கலாம், ஆனால் மொத்த விருந்தினர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டக்கூடாது.

கொரோனாவிற்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் திறந்திருக்கும்.

அவர்களில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதே போல், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் உட்பட எளிதில் பாதிப்படையக் கூடியவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டதுல் இருந்து மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக ஐக்கிய அரபு அமீரகம் மிகக் குறைந்த தினசரி கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்த காரணத்தினால் கட்டுப்பாடுகளானது தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.