ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆகியவை அமீரகத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 5 முதல் நாடு திரும்பலாம் என்று தெரிவித்தது.
இருப்பினும், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எக்ஸ்போ 2020 தொழிலாளர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறவுள்ளவர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப விரும்புபவரகள் உட்பட சில பயணிகளுக்கு தடுப்பூசி போடவில்லையென்றாலும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்கள், அடையாள மற்றும் குடிமைக்கான மத்திய ஆணையத்தின் (ICA) இணைய போர்டல் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ‘மனிதாபிமான அடிப்படையில்’ பயண விலக்குக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்திற்கு வெளியே தடுப்பூசி போட்டவர்கள் உட்பட பல பயணிகள் நாடு திரும்புவதை இந்த சேவையை எளிதாக்கிக் கொடுத்த ட்ராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
“மனிதாபிமான அடிப்படையில் பயணம் செய்வதற்கான முக்கிய காரணமாக குடும்ப மறுசீரமைப்பு தகுதி பெறுகிறது. பயணிகளின் சார்பாக நாங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவுடன், அவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் திரும்ப முடிந்தது, ”என்று அரூஹா டிராவல்ஸின் நிர்வாக இயக்குநர் ரஷித் அப்பாஸ் விளக்கியுள்ளார்.
“ஆகஸ்ட் 5 முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கு இதுபோன்ற இரண்டு குடும்பங்களுக்கு நாங்கள் உதவியிருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் பயணத்திற்கு முந்தைய மற்ற அனைத்து விதிகளும் இவர்களுக்கு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகை பயணிகள் அனுபவிக்கும் ஒரே நெகிழ்வுத்தன்மை என்னவென்றால், அவர்கள் தடுப்பூசி போடப்படாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தடுப்பூசி எடுத்திருக்கலாம்” என்று தேரா டிராவல் அண்ட் டூரிஸ்ட் ஏஜென்சியின் பொது மேலாளர் டிபி சுதீஷ் கூறியிருக்கிறார்.
இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட இமிகிரேஷன் அதிகாரிகளிடமிருந்து பயணத்திற்கு முந்தைய அனுமதிகள், அவர்கள் பயணிக்கும் எமிரேட்டைப் பொறுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான அடிப்படையில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சுதீஷின் கூற்றுப்படி, “மனிதாபிமான பரிசீலனைக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் தொடர்புடைய விவரங்களை ICA ‘Register Arrivals’ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதில் “பயணி விண்ணப்பதாரர் தகவல், பாஸ்போர்ட் தகவல், ஐக்கிய அரபு அமீரகத்தில் முகவரி மற்றும் தடுப்பூசி தகவல் வழங்கியவுடன், ‘accessories info’ என்ற பிரிவு உள்ளது. அவசர பயணத்திற்கான காரணத்தை விளக்கும் கடிதத்தின் நகலை இங்கே அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று சுதீஷ் விளக்கினார்.
உதாரணமாக, குடும்பங்கள் ஒன்றிணைவது பயணத்திற்கு ஒரு காரணமாக இருந்தால், விண்ணப்பதாரர் தங்கள் ஸ்பான்சரின் பெயரையும், அவருடனான உறவையும் குறிப்பிட்டு கையொப்பமிட்ட கடிதத்தை எழுத வேண்டும்.
“சில சந்தர்ப்பங்களில், கணவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தால், மற்றும் மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் இருந்தால், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதை இந்த கடிதத்தில் பயணத்திற்கான காரணம் என்று குறிப்பிடலாம்” என்று முகவர்கள் விளக்கியுள்ளனர்.
ICA- வின் ‘Register Arrivals’ வலைப்பக்கத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சலில் ஒரு QR குறியீட்டைப் பெறுவார்கள். “பயணிகள் அனைத்து துணை ஆவணங்களையும் தங்களுடன் புறப்படும் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.
புறப்படும் விமான நிலையங்களின் செக்-இன் கவுண்டரில், இவை RT-PCR சோதனை முடிவு மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசால் நிர்ணயிக்கப்பட்ட பிற முன்நிபந்தனைகளுடன் வழங்கப்பட வேண்டும்” என்று அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
மனிதாபிமான விலக்குக்கு யார் தகுதியானவர்?
“மனிதாபிமான விலக்குகள் ஒவ்வொரு நபராக அவர்களின் பயணத்திற்கான காரணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. பயணி வழங்கும் கடிதம் அவசரநிலையை விளக்க வேண்டும் மற்றும் அவர்கள் செல்லுபடியாகும் குடியிருப்பு விசா வைத்திருக்க வேண்டும்” என்று ரஷீத் அப்பாஸ் கூறியுள்ளார்.
இருப்பினும், மனிதாபிமான விலக்குகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய பயணிகளின் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பல மாதங்களாக பிரிந்து வாழும் மற்றும் மீண்டும் ஒன்றிணைய விரும்பும் குடும்பங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய குழந்தைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களுடைய குழந்தைகளிடம் திரும்ப விரும்பும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸி விசா வைத்துள்ள வயதான பெற்றோர்கள்
தாய்மார்கள் மற்றும் உடன் வரும் குழந்தைகள்
என்ன ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்?
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவசரமாக திரும்புவதற்கான காரணத்தை விளக்கும் கடிதத்தின் நகல். இந்த கடிதத்தை ICA ‘Register Arrivals’ இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும்
பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி, தடுப்பூசி பதிவு (ஏதேனும் இருந்தால்), செல்லுபடியாகும் விசா, PCR சோதனை முடிவுகள், முகவரி விவரங்கள்
ஸ்பான்சர்களின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் அவர்களின் பாஸ்போர்ட் நகல்களை எடுத்துச் செல்லவும் டிராவல் ஏஜெண்ட்கள் பயணிகளுக்கு பரிந்துரைக்கின்றனர்.
ICA மற்றும் GDRFA ஒப்புதல்கள்
சுதீஷின் கூற்றுப்படி, மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்புபவர்களுக்கும் பயணத்திற்கு முந்தைய ICA மற்றும் குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஒப்புதல்கள் தேவை.
இருப்பினும், ICA ஒப்புதல்களுக்கு விண்ணப்பிக்கும் போது, ‘Register Arrivals’ மற்றும் ‘Residence Entry Confirmation’ இரண்டு தனித்தனி செயல்முறைகள் என்று சுதீஷ் விளக்கியுள்ளார்.
இதில் மக்கள் பலரும் குழப்பமடைகின்றனர். “உதாரணமாக, பயணி துபாயில் வசிப்பவர் மற்றும் மனிதாபிமான விலக்குக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் ICA ‘Register Arrival இணையதளத்தில்’ விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் துபாயில் மீண்டும் நுழைவதற்கு GDRFA இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
ICA விடம் இருந்து QR குறியீட்டைப் பெறுவதில் சிக்கல் உள்ள குடியிருப்பாளர்கள் எளிதாக அணுக இணையதளத்திற்குப் பதிலாக மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தவும் முகவர்கள் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.