ADVERTISEMENT

5 வருட முயற்சிக்குப் பின் துபாய் டியூட்டி ஃப்ரீ ரேஃபிளில் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வென்ற இந்தியர்..!!

Published: 12 Aug 2021, 5:26 AM |
Updated: 12 Aug 2021, 5:31 AM |
Posted By: admin

துபாய் டியூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் ரேஃபிள் டிராவில் இந்திய விமான போக்குவரத்து பொறியாளர் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

57 வயதான சாபு ஆலமிட்டத் எனும் இந்தியர், துபாய் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பொறியாளராக (Air Traffic Engineer) பணியாற்றி வருகிறார். அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக துபாய் டியூட்டி ஃப்ரீ ப்ரமோஷனில் பங்கேற்று வருவதாக தெரிவித்திருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தற்பொழுது அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில், “இது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம்! இது நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை” எனக் கூறியுள்ளார்

ADVERTISEMENT

அத்துடன் “இது நம் அனைவருக்கும் கடினமான ஆண்டாக இருந்தது. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த பணம் நிச்சயமாக சில தொண்டு நிறுவனங்கள் உட்பட பலவற்றிற்கு உதவிகரமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அலமிட்டத், 1999 இல் மில்லினியம் மில்லியனர் ப்ரொமோஷன் தொடங்கியதில் இருந்து 1 மில்லியன் டாலர்களை வென்ற 182 வது இந்திய நாட்டவர் ஆவார். இந்த ப்ரொமஷனிற்கு அதிகளவில் இந்தியர்களே டிக்கெட் வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT