ADVERTISEMENT

துபாய் விசா உள்ளவர்கள் மட்டுமே துபாய் பயணிக்கலாம்..!! புதிதாக வழங்கப்பட்ட விசாவில் துபாய் வர முடியாது..!! எமிரேட்ஸ் தகவல்..!!

Published: 14 Aug 2021, 2:47 AM |
Updated: 14 Aug 2021, 2:57 AM |
Posted By: admin

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து துபாய் அல்லாத விசா வைத்திருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாது என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சமூக ஊடகத்தில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த எமிரேட்ஸ் ஆதரவு ஊழியர்கள், GDRFA ஒப்புதல் பெற்ற துபாய் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே துபாய்க்குப் பயணிக்க முடியும். துபாய் அல்லாத மற்ற எமிரேட்டில் வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு பயணம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியாவிலிருந்து துபாய்க்கு சுற்றுலாப் பயணிகள் எப்போது செல்லலாம் என்று மற்றொரு நபர் கேட்டபோது, ​​எமிரேட்ஸ் ஆதரவு ஊழியர்கள் இது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் இல்லை என்று பதிலளித்தனர்:

ADVERTISEMENT

“இப்போதைக்கு, துபாய் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து துபாய்க்குப் பயணிக்க முடியும். மேலதிக புதுப்பிப்புகளுக்கு தயவுசெய்து எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும். நுழைவு விதிகள் மற்றும் பயண வழிகாட்டுதல்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், புதிதாக வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் நபர்களும் துபாய் பயணிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 7 ஆம் தேதி, ஏர் இந்தியா தனது பயண முகவர்களுக்கான சுற்றறிக்கையில் பயணிகள் தங்கள் ரெசிடென்ஸ் விசா வழங்கப்பட்ட எமிரேட்டில் தரையிறங்க வேண்டும் என்று கூறியிருந்தது.

ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் இந்த புதுப்பிப்புகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிவில் ஏவியேஷன் அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.