ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்..!! தேசிய வானிலை மையம் தகவல்..!!

Published: 16 Aug 2021, 2:05 PM |
Updated: 16 Aug 2021, 3:11 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 16 திங்கள் கிழமையன்று ரிக்டர் அளவுகோலில் 2.2 அளவான ஒரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மசாஃபியில் இன்று மதியம் 3.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.

வானிலை மையம் இது குறித்து தெரிவிக்கையில், ஐக்கிய அரபு அமீரகமானது ஒரு வருடத்தில் பல முறை சிறிய நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது. இருப்பினும் இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

நில அதிர்வு நிபுணர் இதற்கு முன்பு கூறுகையில், அமீரக குடியிருப்பாளர்கள் இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இது போன்ற சிறிய அளவிலான நிநடுக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்திருந்தார்.

“டிப்பா, மசாஃபி, கொர்ஃபக்கான் சிட்டி, ஓமான் கடல் எதிரே இருக்கும் ஃபுஜைரா சிட்டி மற்றும் கல்பாவில் கடந்த 10 வருடங்களாக நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது இந்த பகுதிகளில் உள்ள நிலத்தட்டுகள் நகர்வதால் ஏற்படுகிறது” என்று NCM நில அதிர்வு இயக்குனர் கமிஸ் எல்ஷாம்சி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பொதுவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்படும்  நிலநடுக்கம் ஒப்பீட்டளவில் 2 முதல் 5 ரிக்டர் எனுமளவில் சிறியதாக இருக்கும் மற்றும் பெரிய விளைவை ஏற்படுத்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.