ADVERTISEMENT

UAE: PCR ரிசல்ட்டை விரைவில் பெற புதிய வசதி..!! கட்டணம்தான் சற்று அதிகம்..!! சுகாதாரத்துறை தகவல்..!!

Published: 18 Aug 2021, 12:22 PM |
Updated: 18 Aug 2021, 12:30 PM |
Posted By: admin

அபுதாபியில் கொரோனாவிற்கான PCR சோதனைக்கு சமீப காலமாக 65 திர்ஹம்ஸ் மட்டுமே செலவாகும். இதற்கான முடிவினைப் பெற வழக்கமாக 24 மணி நேரமாகும்.

ADVERTISEMENT

இருப்பினும், வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சோதனைகளுக்கான முடிவுகளை விரைவில் கொடுக்கும் இரண்டு விருப்பங்கள் தற்பெழுது கிடைக்கின்றன. ஒன்று PCR சோதனை மேற்கொண்டதில் இருந்து முதல் இரண்டு மணி நேரத்திற்குள் முடிவினைப் பெற 350 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது முதல் ஐந்து மணி நேரத்திற்குள் முடிவினைப் பெற 250 திர்ஹம் கட்டணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை கூறுகையில், “இது அபுதாபியின் அனைத்து சமூக உறுப்பினர்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்கும் அவர்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவர்கள் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கும், ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் சுகாதாரப் பணியாளர்களின் விதிவிலக்கான சுற்றுப்புற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஏற்ப உள்ளது” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் PCR சோதனையை தங்கள் வீட்டில் இருந்து பெற விரும்புபவர்கள் சுகாதார மையங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, குடியிருப்பாளர்களை Healthsystemfinancy@doh.gov.ae என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT