ADVERTISEMENT

அமீரக அரசு குடியிருப்பாளர்களுக்கு மாதம் 5,500 திர்ஹம் வழங்குவதாக பரவி வரும் செய்தி..!! எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்..!!

Published: 18 Aug 2021, 2:56 PM |
Updated: 18 Aug 2021, 3:00 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வப்போது அரசின் சார்பாக வருவதாக பல போலி செய்திகள் உலா வருகின்றன. அந்த வரிசையில் அமீரக அரங்கத்தின் அவசர கால மாதாந்திர தொகையானது குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்பதை உறுதியளிக்கும் வகையில் தற்பொழுது பரவி வரும் வலைத்தள இணைப்பு போலியானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) குடியிருப்பாளர்களுக்கு அதிகாரப்பூர்வ அமீரக அரசு நிறுவனம் என்று பரவி வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

பயனர்கள் இந்த லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு 5,500 திர்ஹம் கிடைப்பதற்கான சலுகையைப் பெறுவார்கள் என்ற செய்தியினால் ஈர்க்கப்பட்டு லிங்கை கிளிக் செய்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த லிங்கில் நீங்கள் சென்றால் உங்கள் தனியுரிமையை மீறலாம் என்றும் TDRA எச்சரித்துள்ளது.

குடியிருப்பாளர்களுக்கு வரும் இந்த போலியான செய்தியில், “அரசாங்கத்தின் அவசர கால பணத்தை தவறவிடாதீர்கள். ஒவ்வொரு பெறுநரும் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5,500 திர்ஹம் பெறுவார்கள். இதற்காக விண்ணப்பிக்க சில வினாடிகளே ஆகும். இந்த சிறந்த வாய்ப்பை இழக்காதீர்கள்.” என இருக்கின்றது.

ADVERTISEMENT

ஆன்லைன் மோசடிகள் மற்றும் போலி உரிமைகோரல்கள் குறித்து TDRA தொடர்ந்து குடியிருப்பாளர்களை எச்சரித்து வருகிறது.

கடந்த மாதம், ஆணையம் ஒரு வைரலாகி வந்த இது போன்ற போலி சமூக ஊடக பதிவை மறுத்தது. இது மோசடி செய்பவர்கள் தொலைபேசி அழைப்பு மூலம் குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முடியும் என்று ஆணையம் அறிவுறுத்தியது. 

இதே போல் கடந்த ஆண்டும், அபுதாபி காவல்துறை ஒரு ஆன்லைன் மோசடி குறித்து எச்சரித்தது. இது பயனர்களை, “பொருத்தமற்ற விஷயங்களை ஆன்லைனில் பார்ப்பதற்காக அவர்களின் லேப்டாப்கள் முடக்கப்படுவதைத் தவிர்க்க ஒரு போலீஸ் வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்று 3000 திர்ஹம் செலுத்த வேண்டும்” என்று பரவி வந்த போலி செய்தி குறித்து எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.