இந்தியா, இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்களின் ரெசிடென்ஸ் விசாக்களின் காலாவதி தேதியை துபாயின் பொது இயக்குநரகம் (GDRFA) நீட்டித்துள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் காலாவதியான ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களின் செல்லுபடி காலம் நவம்பர் 10, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
“இது ஏப்ரல் 20, 2021 முதல் நவம்பர் 9, 2021 வரை காலாவதியான அல்லது காலாவதியாகும் துபாய்-வழங்கிய அமீரக ரெசிடென்ஸி விசாக்களுக்கு பொருந்தும்,” என்று ஆணையம் கூறியுள்ளது.
அதே போல் அக்டோபர் 20, 2020 க்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே சென்று ஆறு மாதங்களுக்கு மேல் தங்கி காலாவதியான துபாய் விசா கொண்டவர்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்படாது என்றும் GDRFA அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் துபாய் வழங்கிய ரெசிடென்ஸ் விசாக்களின் நிலையை https://amer.gdrfad.gov.ae/visa-inquiry என்ற லிங்கில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
விமானங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளிநாட்டில் சிக்கித் தவித்தது குறிப்பிடத்தக்கது.