ADVERTISEMENT

UAE: வெளிநாட்டில் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவு செய்வது எப்படி..!!

Published: 29 Aug 2021, 1:36 PM |
Updated: 29 Aug 2021, 3:56 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசானது நாளை ஆகஸ்ட் 30 முதல் அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக ICA மற்றும் NCEMA அறிவித்ததை தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகாரம் பெற்ற கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸும் முழுமையாக போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் அமீரகம் வரலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது அமீரகம் வர தடை அமலில் இருக்கும் இந்தியா, இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஐக்கிய அரபுஅமீரகத்தில் தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான சலுகைகளை சுற்றுலா விசாவில் வருபவர்களும் அனுபவிப்பதற்காக ICA வலைத்தளம் அல்லது அல்ஹோஸ்ன் செயலியில் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி, அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் பயணிக்கவிருக்கும் பயணிகள் வெளிநாட்டில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) இயங்குதளம் அல்லது அல்ஹோஸ்ன் ஆப் மூலம் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதை கீழே காணலாம்.

படி 1: அமீரகம் புறப்படுவதற்கு முன், பார்வையாளர்கள் அல்லது சுற்றுலாவாசிகள் ICA மொபைல் அப்ளிகேஷனின் ‘வருகை பதிவு (Register Arrivals)’ பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

படி 2: ‘வருகை பதிவு’ படிவத்தை பூர்த்தி செய்து வெளிநாட்டில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு பார்வையாளர்கள் பதிவு செய்த தங்களின் மொபைல் எண்ணில் அல்ஹோஸ்ன் பயன்பாட்டைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு உட்பட ஒரு SMS ஐ பெறுவார்கள்.

படி 3: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவுடன், பார்வையாளர்கள் விமான நிலையத்திலோ அல்லது ICA ஆப் அல்லது இணையதளத்திலோ ஒரு ஒருங்கிணைந்த அடையாள எண்ணை (UID) பெறுவார்கள்.

படி 4: அதன் பிறகு அமீரகத்தில் PCR சோதனை எடுக்கும்போது பயணிகள் ICA பதிவுக்காக பயன்படுத்தப்படும் மொபைல் போன் எண் மற்றும் UID ஐ பயன்படுத்தி அல் ஹோஸ்ன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

படி 5: அல் ஹோஸ்ன் ஆப் பதிவு செயல்முறையை முடிக்க பார்வையாளர்கள் ஒரு முறை OTP பெறுவார்கள்.

அல் ஹோஸ்ன் பயன்பாடானது பயனாளர்களின் நிலை, தடுப்பூசி தகவல், சோதனை முடிவுகள் மற்றும் பயண சோதனை தேவைகளை சரிபார்த்துக்கொள்ளவும் நேரடி QR குறியீட்டைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

சுற்றுலா விசாவில் அமீரகம் பயணிப்பவர்கள் “ICA வருகை பதிவில்” பதிவு செய்வது எப்படி..??