ADVERTISEMENT

UAE: புதிய விசிட் விசா, என்ட்ரி பெர்மிட்டில் துபாய் வருபவர்களுக்கு GDRFA ஒப்புதல் தேவையில்லை..!! உறுதி செய்த எமிரேட்ஸ்..!!

Published: 31 Aug 2021, 5:34 AM |
Updated: 31 Aug 2021, 5:46 AM |
Posted By: admin

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புதிய விசிட் விசா, என்ட்ரி பெர்மிட் பெற்றவர்கள் தற்பொழுது துபாய் பயணிக்கலாம் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

“புதிய நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் இப்போது பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு செல்லலாம். உங்களுக்கு GDRFA ஒப்புதல் தேவையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விமான நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியா, இலங்கையில் இருந்து வரும் பயணிகளுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய புதுப்பிப்புகளின்படி, புதிதாக வழங்கப்பட்ட விசிட் விசாவுடன் பயணம் செய்யும் பயணிகள் GDRFA அல்லது ICA வின் அனுமதியே இல்லாமல் துபாய் வரலாம். அதே நேரத்தில் உங்கள் வருகை, புறப்பாடு மற்றும் ட்ரான்ஸிட்டில் பயணிக்கும் நாட்டிற்கான அனைத்து பயணத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும், ”என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மற்றொரு பதிவில் “சுற்றுலா விசா வைத்திருக்கும் பயணிகள் இப்போது துபாய்க்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழ் மற்றும் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள் ரேபிட் PCR சோதனை ஆகியவற்றை வழங்க வேண்டும்” என கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 30 முதல் அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.