ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தேசிய வானிலை மையத்தின் வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மிதமானது முதல் பலத்த மழை பெய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமீரகம் முழுவதும் சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வாகன ஓட்டிகள் ஈரமான சாலைகளில் செல்வதையும், தெரிவுத் திறன் குறைந்துள்ளதையும் பதிவு செய்துள்ளன.
أمطار الجاهلي #العين حالياً #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #خليفة_بن_شبير #عواصف_الشمال pic.twitter.com/nt2WyvQDX6
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 4, 2021
முன்னதாக, வானிலை மையம் “மழைப்பொழிவுடன் தொடர்புடைய வெப்பச்சலன மேக உருவாக்கத்தின் காரணமாக, சில நேரங்களில் 45 கிமீ வேகத்தில் புதிய மற்றும் வலுவான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
அதே போல் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை தூசி மற்றும் மணல் வீசுவதன் காரணத்தினால் கிடைமட்ட தெரிவுநிலை குறையும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது.
أمطار هيلي #العين حالياً #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس pic.twitter.com/7X9nsjPw3P
— المركز الوطني للأرصاد (@NCMS_media) September 4, 2021
அதனையொட்டி அல் அய்னின் பல பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த மழைபெய்துள்ளது. அமீரகத்தில் நிலவி வந்த கடும் வெயிலுக்கு தற்போது பெய்த மழையானது குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.