அபுதாபியில் வரும் செவ்வாய்க்கிழமை முதல், 16 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனியின் (SEHA) சுகாதார மையங்களை அணுக தங்கள் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் காட்ட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த புதிய விதிமுறை அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் டிரைவ்-த்ரூ சோதனை மையங்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸானது ஒரு நபரின் எதிர்மறை PCR சோதனை முடிவுக்குப் பிறகு தோன்றும் மற்றும் இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழுவின் சமீபத்திய உத்தரவைப் பின்பற்றும் வகையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபுதாபியில் கடந்த ஆகஸ்ட் 20 முதல் பொது இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு ‘கிரீன் பாஸ்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
தடுப்பூசி போடப்படாத மக்கள் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், கஃபேக்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.