ADVERTISEMENT

அமீரகத்தில் துவங்கப்படவுள்ள IPL கிரிக்கெட் போட்டி..!! நாளை முதல் டிக்கெட் விற்பனை..!!

Published: 15 Sep 2021, 12:47 PM |
Updated: 15 Sep 2021, 12:49 PM |
Posted By: admin

கொரோனா இரண்டாம் அலைப் பரவலால் இடைநிறுத்தப்பட்டிருந்த IPL போட்டியானது தற்பொழுது அமீரகத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் துவங்கப்படவுள்ள இந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டித்தொடரை ரசிகர்கள் மீண்டும் மைதானத்திற்கு சென்று கண்டு களிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) புதன்கிழமை உறுதி செய்துள்ளது.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது மூன்று முறை IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை செப்டம்பர் 19 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

ADVERTISEMENT

போட்டியைக் காண ரசிகர்கள் செப்டம்பர் 16 முதல் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iplt20.com இல் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் டிக்கெட்டுகளை PlatinumList.net இலும் வாங்கிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் கொரோனாவிற்கான நெறிமுறைகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக விதிமுறைகளை கருத்தில் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளுடன் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.