ADVERTISEMENT

பிக் டிக்கெட்டில் 10 மில்லியன் திர்ஹம் வென்ற இந்தியர்.. தொடர்பு கொள்ள முயற்சிக்கும் பிக் டிக்கெட் குழுவினர்..!!

Published: 4 Oct 2021, 1:49 PM |
Updated: 4 Oct 2021, 1:49 PM |
Posted By: admin

அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் 3 ம் தேதி நடைபெற்று வரும் பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவானது இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பிக் டிக்கெட் அபுதாபி தொடர் 232 டிராவில் இந்தியாவைச் சேர்ந்த நஹீல் நிஜாமுதீன் 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

இவர் செப்டம்பர் 26 அன்று 278109 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியுள்ளார். இருப்பினும், கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தின் முகவரியைக் கொடுத்த நிஜாமுதீனை, நிகழ்ச்சித் தொகுப்பாளரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் உள்ள ஒரு தானியங்கி செய்தி வந்ததாக பிக் டிக்கெட் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் நிஜாமுதீனைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயன்று வருவதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருடன் சேர்த்து, சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏஞ்சலோ பெர்னாண்டஸ் என்பவர் செப்டம்பர் 25 அன்று வாங்கிய டிக்கெட் எண் 000176 உடன் இரண்டாவது பரிசாக 1 மில்லியன் திர்ஹம் ரொக்கப்பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT