ADVERTISEMENT

Expo 2020: அழுத சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் மன்னர் ஷேக் முஹம்மது..!!

Published: 30 Oct 2021, 4:46 PM |
Updated: 30 Oct 2021, 4:49 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அழுது கொண்டிருந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

ADVERTISEMENT

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது  ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், ஒரு சிறுமி அழுது கொண்டே ஷேக் முகமதுவைச் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க எக்ஸ்போ 2020 க்கு அழைத்துச் செல்லும்படி தனது தாயிடம் கோரியிருக்கிறார்.

அதனை அறிந்து கொண்ட, ஷேக் முகமது அச்சறுமியை எக்ஸ்போவில் நேரில் சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றி இருவரும் பின்னர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோவினை துபாயின் மகுட இளவரசரான ஷேக் ஹம்தானும் பகிர்ந்துள்ளார்.

எக்ஸ்போ தளத்தில், துபாய் மன்னர் ஷேக் முகமதுவை அரவணைக்க சிறுமி விரைந்து வருவதையும், சிறுமியை அன்புடன் அரவணைத்தபோது ஆனந்தக் கண்ணீருடன் சிறுமி அழுவதையும் அந்த வீடியோவில் காணலாம்.

ADVERTISEMENT

அழுது கொண்டிருந்த குழந்தைக்கு துபாய் ஆட்சியாளர் ஆறுதல் கூறியதுடன், நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். இது குறித்து ஷேக் முகமது அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறுமியுடனான தனது சந்திப்பு, இதுவரை எக்ஸ்போவில் எனது சிறந்த தனிப்பட்ட சந்திப்பு.. என்று கூறியுள்ளார்.