ADVERTISEMENT

அமீரகத்தில் நிலவும் கடும் மூடுபனி..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்..!!

Published: 2 Nov 2021, 3:48 AM |
Updated: 2 Nov 2021, 3:48 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் செவ்வாய்கிழமை அதிகாலை தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, கடும் மூடுபனி நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் நிலவும் கடுமையான மூடுபனியை அடுத்து அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளை மெதுவாக செல்லுமாறு எச்சரித்து செய்திகளை அனுப்பியுள்ளது. அத்துடன் அபுதாபி – துபாய் சாலையில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் வேகக் குறைப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மூடுபனி உருவாக்கம் நாடு முழுவதும் கிடைமட்டத் தெரிவுநிலையைப் (visibility) பாதிக்கும் என்று NCM எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தது. மேலும் “சில உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் சில நேரங்களில் தெரிவுநிலை மேலும் குறையும்” என்றும் NCM எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி மற்றும் துபாயின் சில பகுதிகளில் அதிகாலை 1 மணியளவில் பனிமூட்டம் காணப்பட்டது. NCM இன் தகவல்படி, இந்த மூடுபனி காலை 9 மணி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அபுதாபியின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அல் தஃப்ரா பகுதி மற்றும் அல் அய்னில் உள்ள பகுதிகளில் தெரிவுநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பனிமூட்டத்தின் போது பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு குடியிருப்பாளர்களை அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

மூடுபனி உருவாகும் போது ஓட்டுநர்கள் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கு முன் வானிலை நிலவரத்தை சரிபார்க்க வேண்டும் என்று காவல்துறை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் வாகனத்தின் வேகத்தை குறைக்கவும், வாகனங்களுக்கு இடையில் போதிய பாதுகாப்பு இடைவெளியை விட்டு செல்லவும், வேக வரம்புகளை கடைபிடிக்கவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அபுதாபி காவல்துறை ஸ்வீஹான் சாலை (அபுதாபி – சையத் மிலிட்டரி சிட்டி, அபுதாபி – அல் அய்ன் சாலை (அல் அமேரா – ரிமா) மற்றும் ஸ்வீஹான் – அல் அஜ்பன் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மணிக்கு 80 கிமீ வேகத்தில் வேகக் குறைப்பு முறையை செயல்படுத்தியுள்ளது.