ADVERTISEMENT

அமீரகத்தில் அனைத்து ஷாப்பிங் மால்களையும் மூட உத்தரவு..!!! MoHAP அறிவிப்பு..!!!

Published: 23 Mar 2020, 3:39 AM |
Updated: 23 Mar 2020, 4:06 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அமீரகத்தில் இருக்கும் அனைத்து வர்த்தக மையங்களையும், மீன், இறைச்சி மற்றும் காய்கறி சந்தைகளுடன் கூடிய ஷாப்பிங் மால்களையும் இரண்டு வாரங்களுக்கு மூட ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிக்கை 48 மணி நேரத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்றும், மறுஆய்வு மற்றும் மறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மளிகைக் கடைகள், சூப்பர்மார்க்கெட்கள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. அவை மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவின் கீழ், உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் சென்று உணவருந்தக் கூடாது. அதற்கு பதிலாக, உணவகங்கள் வாடிக்கையாளரின் வீட்டில் சென்று டெலிவரி செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT