ADVERTISEMENT

UAE: இனி இரண்டு மீட்டர் சமூக இடைவெளி தேவையில்லை..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட துபாய்..!!

Published: 5 Nov 2021, 6:59 AM |
Updated: 5 Nov 2021, 6:59 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக அரசின் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக சமீப காலமாகவே தினசரி கொரோனா நோய்த்தொற்றானது 100 க்கும் கீழாகவே பதிவாகி வருகிறது.

ADVERTISEMENT

இதனையடுத்து துபாயின் ஒரு சில பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பின்பற்றப்படும் சமூக இடைவெளி தூரமானது குறைக்கப்பட்டுள்ளது.


சுற்றுலா மற்றும் வர்த்தக சந்தைப்படுத்தல் துறையின் சமீபத்திய சுற்றறிக்கையின்படி, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், ஷாப்பிங் சென்டர்கள், ஜிம்கள், கடற்கரைகள், பொது மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் இனி ஒரு மீட்டர் சமூக தூரத்தை மட்டும் பராமரித்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முந்தைய விதியின்படி குடியிருப்பாளர்கள் மேற்கண்ட இடங்களில் இரண்டு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் அமீரகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பின் காரணமாக சில குறிப்பிட்ட பொது இடங்களில் முக கவசம் அணிய தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT