ADVERTISEMENT

அமீரகத்தில் பெய்த கனமழை..!! மலைப்பகுதி, பள்ளத்தாக்கிற்கு செல்ல வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை..!!

Published: 8 Nov 2021, 5:24 PM |
Updated: 8 Nov 2021, 5:27 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கள்கிழமை பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததன் காரணமாக, மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு துபாய் காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் கனமழை மற்றும் பலத்த காற்று பற்றியும், நிலையற்ற வானிலை குறித்தும் எச்சரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஃபுஜைரா, கொர்ஃபக்கான், கல்பா மற்றும் ஹத்தா ஆகிய இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை NCM பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னர் ஃபுஜைராவில் உள்ள குடிமைத் தற்காப்பு இயக்குநர் ஜெனரல் பிரிக் அலி ஒபைத் அல் துனைஜி, அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும், குறிப்பாக மோசமான வானிலையின் போது அதிகாரிகளின் எச்சரிக்கை செய்திகளைப் பின்பற்றவும் பொதுமக்களை வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

“வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும்போது பள்ளத்தாக்குகளைக் கடப்பது பற்றிய எச்சரிக்கைகளை சிலர் புறக்கணிக்கிறார்கள். அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த பிறகும் சிலர் பொழுதுபோக்கிற்காக செல்கிறார்கள். இவ்வாறு செய்வது பாதுகாப்பானது அல்ல” எனவும் அவர் கண்டித்துள்ளார்.

மேலும் அமீரகத்தில் பெய்த மழையை வீடியோ எடுத்து சமூக வரைதளங்களில் NCM பகிர்ந்துள்ளது.