ADVERTISEMENT

UAE: எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து..!!

Published: 9 Nov 2021, 8:05 AM |
Updated: 9 Nov 2021, 8:05 AM |
Posted By: admin

ராஸ் அல் கைமாவில் உள்ள அல் ஜசிரா அல் ஹம்ரா பகுதியில் இயங்கி வந்த எண்ணெய் தொழிற்சாலையில் திங்கள்கிழமை திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இரவு 7.30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்பு இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அப்துல்லா அல் ஜாபி தெரிவித்துள்ளார்.

தீவிபத்து பெரியளவில் நிகழ்ந்ததால் நான்கு சிவில் பாதுகாப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக உம் அல் குவைனின் பாதுகாப்பு குழுக்களும் இந்த நடவடிக்கைக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விரைவிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த தீ விபத்தில் ஏற்பட்ட பொருள் சேதம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.