ADVERTISEMENT

துபாய், சென்னை இடையே விமான சேவைகளை ரத்து செய்துள்ள எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!!

Published: 10 Nov 2021, 8:49 AM |
Updated: 10 Nov 2021, 8:51 AM |
Posted By: admin

சென்னையில் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னைக்கு செல்லும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களை ரத்து செய்வதாக துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பின்வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

EK542: நவம்பர் 10 அன்று துபாய்-சென்னை பயணிக்கும் விமானம்

ADVERTISEMENT

EK543: நவம்பர் 11 அன்று சென்னை-துபாய் பயணிக்கும் விமானம்

EK544: நவம்பர் 11 அன்று துபாய்-சென்னை பயணிக்கும் விமானம்

ADVERTISEMENT

EK545: நவம்பர் 11 அன்று சென்னை-துபாய் பயணிக்கும் விமானம் 

இந்த காலகட்டத்தில் எமிரேட்ஸ் நெட்வொர்க்கில் உள்ள எந்தப் பகுதியில் இருந்தும் இறுதியாக சென்னையை சென்றடையவுள்ள பயணிகள் பயணத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தங்கள் டிக்கைட்டை புக்கிங் செய்த டிராவல் ஏஜெண்டை தொடர்பு கொள்ளுமாறும் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.