ADVERTISEMENT

5 ஆண்டு மல்டி என்ட்ரி விசாவை வழங்க துவங்கிய துபாய்..!! அமீரகத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லலாம்..!!

Published: 16 Nov 2021, 1:27 PM |
Updated: 16 Nov 2021, 1:43 PM |
Posted By: admin

துபாயில் உள்ள அதிகாரிகள் சர்வதேச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்தாண்டு காலத்துடன் பல முறை அமீரகம் வந்து செல்லக்கூடிய நுழைவு அனுமதிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர் என்று துபாயின் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் உள்ள நிர்வாகக் குழுவின் தலைவரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்பதற்காக ஊழியர்களை ஆண்டு முழுவதும் துபாய்க்கு வந்து செல்ல வைப்பதே இதன் இலக்கு என்று ட்வீட் செய்துள்ளார்.

பணிச்சூழல், திறமையான உள்கட்டமைப்பு மற்றும் முடிவெடுப்பதில் நெகிழ்வுத்தன்மை மற்றும் வேகம் ஆகியவற்றிற்கான விதிமுறைகளின் தொடர்ச்சியான வளர்ச்சியில் மக்கள் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கும் உலகின் சிறந்த நகரமாக துபாய் தனது நிலையை தொடர்ந்து மேம்படுத்துக் கொண்டு வருகிறது என்பதை அவர் விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் கூறுகையில், “துபாய் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேலும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வெற்றிபெற மற்றும் சிறந்து விளங்க உதவுவதற்கான நகரமாக துபாய் இருக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.