துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் உள்ள துபாய் ஏர்ஷோ 2021 தளத்தில் செவ்வாயன்று நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ (DDF) மில்லினியம் மில்லியனர் டிராவில் துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ர்யான் வால்டேரோ எனும் பெயர் கொண்ட வெற்றியாளர் தனது வெற்றிக்கான டிக்கெட் எண் 0274ஐ ஆன்லைனில் அக்டோபர் 27 அன்று வாங்கியிருக்கிறார். 46 வயதான அவர் 20 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார்.
அவர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் DDF ப்ரொமோஷனில் பங்கேற்கத் தொடங்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர் வெற்றி பெற்றது குறித்து அதிகாரிகளிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தபோது அதை நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில், “நான் வென்ற பணத்தை வைத்து இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினருக்கும், எனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், உதவி தேவைப்படுவோர் சிலருக்கும் உதவுவேன்,” என்று தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் ப்ரொமோஷன் தொடங்கியதில் இருந்து $1 மில்லியன் வென்ற 185வது இந்தியர் வால்டேரோ ஆவார்.
மில்லேனியம் மில்லியனர் டிராவைத் தொடர்ந்து, ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகளுக்கான ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிரா (Finest Surprise draw) நடந்தது.
கத்தார் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல் குவாரி, அக்டோபர் 8 ஆம் தேதி ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 1786 இன் டிக்கெட் எண் 0828 உடன் மெர்சிடிஸ் பென்ஸ் S500 (black) காரை வென்றார்.
துபாயில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஹரிஹரன் பி, துபாய் விமான நிலையத்தில் உள்ள DDF Finest Surprise கவுண்டரில் வாங்கிய Finest Surprise Series 475 இல் 0739 என்ற டிக்கெட்டுடன் BMW R 9T ஸ்பெஷல் 719 (aluminium) மோட்டார் பைக்கை வென்றுள்ளார்.
துபாயை தளமாகக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 12 வயதான ஜோச்சிம் பரோன் ராமோஸ், ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 476 இல் 0816 என்ற டிக்கெட்டுடன், BMW F 900 XR (light white) மோட்டார் பைக்கை வென்றுள்ளார். அதை அவரது தந்தை அக்டோபர் 31 அன்று ஆன்லைனில் வாங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.