ADVERTISEMENT

UAE: பிப்ரவரி முதல் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்யலாம்..!! அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

Published: 17 Nov 2021, 4:25 PM |
Updated: 17 Nov 2021, 4:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 2, 2022 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்களின்படி, அமீரகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஒரே நேரத்தில் ஊழியர்கள் வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்தும் 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்ட எண். 33 இன் கீழ், தனியார் துறையில் உள்ள ஊழியர்கள் பகுதி நேரமாகவோ, தற்காலிகமாகவோ அல்லது தங்களுக்கு ஏற்ற வகையிலோ வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

புதிய வகையான வேலைகளை அறிமுகப்படுத்துதல் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடவும், அவர்களின் திறன்களை வித்தியாசமாகப் பயன்படுத்தவும் உதவுகிறது.

ADVERTISEMENT

பகுதி நேர வேலை, பணியாளர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் அல்லது முதலாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணிநேரம் அல்லது வேலைக்குத் திட்டமிடப்பட்ட நாட்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கிறது.

தற்காலிக வேலை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான ஒப்பந்தமாக இருக்கலாம் அல்லது கொடுக்கப்பட்ட வேலை முடிந்தவுடன் ஊழியரின் வேலையும் முடிவடையும் திட்ட அடிப்படையில் இருக்கலாம்.

ADVERTISEMENT

நெகிழ்வான வேலையானது, தொழிலாளர் சந்தையில் தற்போது நடைமுறையில் உள்ள முழுநேர வேலைக்கு கூடுதலாக, வேலையின் நிபந்தனைகள் மற்றும் தேவைகளைப் பொறுத்து வெவ்வேறு நேரங்களில் வேலை செய்வதற்கான சுதந்திரத்தை ஊழியர்களுக்கு வழங்குகிறது.

புதிய சட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்தமானது, வேலை வழங்குபவரின் வேலை அளவு, பொருளாதார தேவை மற்றும் செயல்பாட்டு தேவை ஆகியவற்றைப் பொறுத்து மாறக்கூடிய மணிநேரங்கள் அல்லது நாட்களின் செயல்திறனை உள்ளடக்கியது.

புதிய சட்டம், எளிமையான மற்றும் நெகிழ்வான நடைமுறைகள் மூலம் இன்னும் நாட்டில் உள்ள காலாவதியான ஒப்பந்தங்களை வைத்திருக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளுக்கு உதவுகிறது. இது ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திறமைகள் மற்றும் திறன்களை மிகக் குறைந்த செயல்பாட்டுச் செலவில் பயன்படுத்திக் கொள்ள முதலாளிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இது பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.